Pages

Sunday, September 11, 2011

தொடக்கம்!



எனது
ஒவ்வொரு
கவிதையிலும்!
பிள்ளையார் சுழி - "உன் அன்பு"
முற்றுபுள்ளி- "உன் பிரிவு"

புரிதல் மட்டுமல்ல




புரிதல் மட்டுமல்ல காதல்

புரியாததும் புரிந்து கொள்ள

தவமிருந்து பெறுவது அல்ல காதல்

தேடினாலும் கிடைக்காத காதல்

ஏனடி உன்மேல் எனக்கும்

என்மேல் உனக்கும் காதல்

புரிந்து கொள் காதல்

வெறும் புரிதல் மட்டுமல்ல

காதல் அகதி




உன் காதலில் விழுந்ததனால்

கைதியாகி விட்டேன்

என் தேசத்தை தொலைத்துவிட்டேன்

உன்னை என் உலகம் ஆக்கி விட்டேன்

முடிவாய் அகதி ஆகிவிட்டேன்

காதல் (அ)கைதியாய் மாறிவிட்டேன்

தேவதை



என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

Friday, September 2, 2011

நிலையில்லாத வாழ்க்கை


நிலையில்லாத வாழ்க்கையில்
எதிலும் நிம்மதி இல்லமால்
வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும்
எங்கிருந்து வந்தாய் நீ
என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்

என் கவிதைகள் ..


எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!


என் கற்பனைகள்


என் கற்பனைகள்தான்

அதிகமாய் வாசகர்களுக்கு

காட்டிக் கொடுக்கிறது

உன்னை நான் கவிதையாய்

காதலிப்பதை

Thursday, August 25, 2011

சுமைதாங்கி



உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

தவிப்பு



உன்னிடம் பேசும்போது மட்டும் தான்,

என் தமிழும் தலையில் தட்டுகிறது..

இன்றாவது திருந்த பேசு என்று ..!!

காத்திருக்கிறேன்


காத்திருக்கிறேன்!!!!
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்