Wednesday, August 17, 2011

ஒப்பீடு


நிலவின் அழகு குறைவுதான்
உன்னுடன் ஒப்பிடுகையில்

இருட்டின் கருமை குறைவுதான்
உன் கூந்தலுடன் ஒப்பிடுகையில்
மின்னலின் வெளிச்சம் குறைவுதான்
உன் பார்வையுடன் ஒப்பிடுகையில்

தாலாட்டின் அழகு குறைவுதான்
உன் பேச்சுடன் ஒப்பிடுகையில்

கிளி அலகின் நிறம் குறைவுதான்
உன் வெட்கத்துடன் ஒப்பிடுகையில்

மலரின் மேன்மை குறைவுதான்
உன் பாதங்களுடன் ஒப்பிடுகையில்

மயிலின் நடன அழகு குறைவுதான்
உன் நடையுடன் ஒப்பிடுகையில்

உன் நேசம் எனக்கு பெரிதுதான்
என் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில்

0 comments:

Post a Comment